தமிழகத்தில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இயல்பை விட 125% கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றும் நாளையும் (26,27) நீலகிரி மற்றும் கோவை மழைப் பகுதிகளில் கனமழையும், கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமாக மழையும் பெய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 28ஆம் தேதி தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.