உலக சினிமா சினிமா செய்திகள் 3 நாளில் $180 மில்லியன்…. பட்ஜெட் கணக்கு முடிஞ்சு… லாப கணக்கை தொடங்கிய ஓபன் ஹெய்மர்…!! dailytamilvision.com17 April 20240347 views கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தது. அதனுடன் போட்டியாக பார்பி என்ற திரைப்படமும் வெளிவந்த நிலையில், வசூல் ரீதியாக பார்பி திரைப்படமே முன்னணியில் இருந்து வருவது கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை ஓபன் ஹெய்மர்பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்களில் படத்திற்கான பட்ஜெட் தொகையான 180 மில்லியன் அமெரிக்கன் டாலர் என்ற இலக்கை தற்போது ஓபன் ஹெய்மர் திரைப்படம் அடைந்துள்ளது. இனி வரக்கூடிய நாட்களில் வரக்கூடிய வசூல் பட குழுவிற்கு லாபத் தொகையாக அமையும். இந்தியாவில் ஆகஸ்ட் முதல் வாரம் வரை IMAX திரையரங்குகள் ஓபன் ஹெய்மர் திரைப்படத்திற்கு ஹவுஸ் புல்லாக இருப்பது குறிப்பிடத்தக்கது.