அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள்… 5.65 லட்சம் அதிகாரிகளுக்கு பயிற்சி… மத்திய அரசு தீவிரம்…!!

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறை படுத்தப்பட்ட காலனியாதிக்க சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றை மாற்றி புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறை படுத்த வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புதிய 3 சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அதன்படி புதிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 குற்றவியல் சட்டத்திற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியானது.

இந்நிலையில் அந்த 3 புதிய சட்டங்கள் ஜூலை 1-ஆம் தேதியான இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதிலும் சுமார் 5.65 லட்சம் தடயவியல், நீதித்துறை, சிறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும் பயிற்சியளித்து வருகின்றனர். மேலும் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்ட வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!