செய்திகள் மாநில செய்திகள் 32 வது விவசாய நிபுணர்கள் மாநாடு….. பிரதமர் மோடி அறிக்கை…!!! Sathya Deva3 August 2024082 views இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய நிபுணர்களின் 32 வது மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையின் மையமாக விவசாயம் உள்ளது. யூனியன் பட்ஜெட் 2024 மற்றும்2025 ஆண்டு நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கக்கூடிய விவசாயத்திற்கு ஒரு பெரிய உந்துதலை அளித்துள்ளது. இதனால் தன்னிறவு பெற்ற நாடாகி விட்டது என கூறியுள்ளார். இதில் பால், பருப்பு வகைகள் உற்பத்தியில உலகில் இந்தியா நம்பர் ஒன் நாடாக விளங்குகிறது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், காட்டன், சர்க்கரை, டீ உற்பத்தியில் மிகப்பெரிய இரண்டாவது நாடாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியா தற்போது உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் உயர்ந்ததாக உள்ளது என்றும் கூறினார். இந்திய விவசாயத்தில் 90 சதவீத விவசாயிகள் மிகவும் சிறிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரர்கள். இந்த சிறிய விவசாயிகள் இந்தியாவில் உணவு பாதுகாப்பிற்கு மிக பெரிய பலம் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்தார்.