செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் 35 தங்கும் விடுதிகளை அகற்ற வேண்டும்…உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…!! Revathy Anish19 August 2024094 views நீலகிரி மாவட்டம் பெக்காபுரம், சிங்காரா, வாழை தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் போன்ற பகுதிகளில் யானை செல்லும் வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை ஹை கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி யானை செல்லும் வழித்தடங்களில் கட்டப்பட்ட விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் வழக்கை விசாரித்தை சுப்ரீம் நீதிமன்றமும் யானை வழித்தடத்தில் உள்ள 38 தங்கும் விடுதிகளை மூடி சீல் வைக்க 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனையடுத்து விடுதி உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தனர். எனவே நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து விசாரணையும் மேற்கொண்டனர். அவர்கள் சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்கள், மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை இடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குடியிருப்புக்கான உரிமைகளை பெற்று அந்த இடத்தில் வணிக ரீதியில் விடுதிகளை அமைத்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் மசனகுடி ஊராட்சிக்குட்பட்ட 11 தங்கும் விடுதிகள், சோலூரில் உள்ள 20 தங்கும் விடுதிகள் என மொத்த 35 தனியார் விடுதிகளை இடித்து அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இதனை 15 நாட்களில் அதன் உரிமையாளர்கள் இடித்து அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.