செய்திகள் தொழில்நுட்பம் 35 ஸ்மார்ட்போன்களில் சப்போர்ட்ஆகாது… புது அப்டேட்… மெட்டா நிறுவனம் அறிவிப்பு…!! Revathy Anish29 June 20240308 views உலகம் முழுவதிலும் உள்ள மக்களை இணைக்கும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்த செயலியில் மக்களுக்கு பயன்படும் வகையிலும், எளிமையாக படுத்த பல்வேறு அப்டேட்களை மெட்டா நிறுவனம் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பயனாளர்களின் பாதுகாப்பு போன்றவைகளுக்கு புதிய அப்டேட்கள் வர உள்ளது. ஆனால் இந்த அப்டேட்கள் 35 ஸ்மார்ட் போன்களில் சப்போர்ட் ஆகாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே சாம்சங் கேலக்சி ஏஸ் பிளஸ், எக்ஸ்பிரஸ் 2, நோட் 3, எஸ்4, ஜூம், கிராண்ட், எஸ்4 மினி, எஸ்3 மினி, எஸ்4 ஆக்டிவ், ஐபோன் எஸ்சி, 5, 6, 6எஸ், 6எஸ் பிளஸ், மோட்டோ ஜி, மோட்டோ எக்ஸ், லெனோவா ஏ858டி, 46600, எஸ்890, பி70, சோனி எக்ஸ்பெரியா இ3, என்ஸ்பெரியா இசட்1 ஹூவெய் அஸ்சென்ட் ஜி 525, அஸ்சென்ட் பி6 எஸ், ஜிஎக்ஸ்1 எஸ், சி 199, ஒய் 625 ஆகிய மடல்கள் வைத்திருப்பவர்கள் தங்களது வாட்ஸ்அப்-ஐ பேக்அப் எடுத்து கொள்ள வேண்டும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.