தொடர்ந்து 4 நாள்… சதுரகிரி மலைக்கோவிலுக்கு அனுமதி… குவியும் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க படுகின்றனர்.

இந்நிலையில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அடுத்தடுத்து வருவதால் இன்று முதல் 22-ஆம் தேதி வரை கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று காலை 6 மணியில் இருந்து வனத்துறை சோதனைக்கு பிறகு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதிக்கப்பட்டனர். மேலும் நாளை மற்றும் மறுநாள் ஆடி பவுர்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!