செய்திகள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள் 442-வது ஆண்டு பனிமயமாதா கோவில் திருவிழா… 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!! Revathy Anish18 July 20240210 views தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஆலயமான பனிமயமாதா ஆலயத்தில் 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா ஜூலை-26 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே திருவிழாவின் கடைசி நாளான பத்தாம் நாள் அன்று மாவட்டம் முழுவதிலும் உள்ளூர் விடுமுறை தினமாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடு கட்டும் விதமாக ஆகஸ்ட் 10, சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.