5 மணி நேர போராட்டம்… தோட்டத்தில் புகுந்த காட்டு யானை… விவசாயிகள் வேதனை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள 10 வனசரகங்களில் பல வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த விலங்குகள் அவ்வப்போது அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை அச்சுறுத்துவது, விளை நிலங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சிக்கள்ளி கிராமத்தில் வசித்து வரும் சங்கர் என்பவரின் கரும்பு தோட்டத்திற்குள் 4 காட்டு யானைகள் புகுந்து 1 ஏக்கர் கரும்பு பயிரை சேதப்படுத்தியது. இதனை அறிந்த ஊர் மக்கள் 5 மணி நேரம் போராடி 4 காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டினர். இதுகுறித்து விவசாயிகள் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!