லாரி மோதி 5 பேர் பலி… 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி… முதலமைச்சர் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தஞ்சாவூர் வளம்பக்குடி நெடுஞ்சாலை அருகே சென்ற போது சாலையில் வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த முத்துசாமி(60), மீனா(26), ராணி(37), மோகனாம்பாள்(27), தனலட்சுமி(36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த சங்கீதா தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயமடைந்த சங்கீதாவிற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!