சினிமா செய்திகள் 50 வது திரைப்படம் வெளியானது… இயக்குனருடன் சேர்ந்து கொண்டாடிய நடிகர்…!! Gayathri Poomani16 June 20240117 views திரை உலகில் பிரபல இயக்குனரான நிதிலன் சாமிநாதன் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் “மகாராஜா” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இது விஜய் சேதுபதியின் 50-வது படமாகும், இவை தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் தன் குடும்பத்தின் குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதை, இதை அஜனிஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகர் சிங்கம் புலி காமெடி நட்சத்திரமாகவும் மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படபிடிப்பு போது விஜய் சேதுபதி இயக்குனருடன் சேர்ந்து வீடியோ எடுப்பதாக கூறியிருக்கிறார். எனவே நேற்று தமிழகம் முழுவதும் படம் வெளியானதால் விஜய் சேதுபதி சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டார். தற்போது இயக்குனருடன் சேர்ந்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உன்னோடு சேர்ந்து படம் பண்ணதில் எனக்கு மிகப்பெரிய சந்தோசம், ஐ லவ் யூ என்று கூறி இயக்குனருக்கு முத்தம் கொடுக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மகாராஜா திரைப்படம் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.