ஒரே நாளில் 500 கலைஞர் நாணயங்கள் விற்பனை… விலையை குறைக்க தொண்டர்கள் கோரிக்கை…!!

சென்னையில் வைத்து கடந்த 18-ஆம் தேதி மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது உருவம் குறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இதனை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று வாங்கி செல்கின்றனர்.

நேற்று ஒரே நாளில் 500 நாணயங்கள் 50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தொண்டர்கள் கூறுகையில் வசதி படைத்த நிர்வாகிகள் கலைஞர் நாணயத்தை வாங்கி செல்கின்றனர். எனவே சாதாரண தொண்டர்கள் வாங்கும் வகையில் நாணயத்தின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!