116
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சிவதாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டார். இவர் பதவியேற்று ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. இந்நிலையில் சிவதாஸ் மீனா தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து தமிழக அரசின் 50-வது புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சரின் தனி செயலாளராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.