வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கிய பங்கு வகிக்கும் “கப்பலோட்டிய தமிழன்”, “செக்கிழுத்த செம்மல்” என்று அனைவராலும் போற்றப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ. உ. சி நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அதிமுக சார்பில் நிர்வாகிகள் சிறப்பாக செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.