செய்திகள் திருப்பூர் மாவட்ட செய்திகள் “சிக்கிய 620 கிலோ போதை பொருள்”… 21 லட்சம் அபராதம்… ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!! Revathy Anish25 June 2024085 views திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்த உத்தரவின் படி மாவட்டம் முழுவதிலும் போதை பொருள் பயன்பாடை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரியான விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஜூன் மாதம் முழுவதும் நடத்திய சோதனையில் மொத்தம் 78 கடைகளில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 620 கிலோ போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைத்ததோடு கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து இதுவரை 21 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருட்களை தடுக்க அதிகாரிகள் தீவர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.