கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் 77 பேர் மருத்துவமனையில் அனுமதி…63 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish27 June 2024097 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18,19 ஆம் தேதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் 135 பேரில் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு சிகிச்சை பெறாமல் இருந்த 77 பேரை அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் நர்ஸ்கள் பிடித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் சிகிச்சையிலிருந்து குணமடைந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.