திருப்பூர் மாவட்டம் மங்கலம் சமாளபுரம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 2மாணவிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் சமீபத்தில் மறு தேர்வு எழுதி உள்ளனர். இதில் ஒரு மாணவிக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரியும் உள்ள நிலையில் 3 பேரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது பெற்றோர்கள் காலையில் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தனர்.
அப்போது மகள்களை காணாததால் பெற்றோர்கள் பதற்றம் அடைந்து அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டில் கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில் எல்லோரும் எங்களை மன்னித்து விடுங்கள், நாங்கள் 3 பேரும் சென்னைக்கு துணிக்கடையில் வேலைக்கு செல்வதாகவும் எங்களை தேடி அலை வேண்டாம் நாங்களே தீபாவளிக்கு வருகின்றோம் என இருந்தது.
அதேபோல் மற்றொரு மாணவி வீட்டிலும் “நாங்கள் வேலை தேடி சென்னைக்கு போவதாகவும், உங்களிடம் சொன்னால் நீங்கள் விட மாட்டீர்கள் எனவே தங்கையையும் எங்களுடன் அழைத்துக் கொண்டு செல்கிறோம், நாங்கள் வேலைக்கு சென்று பாலிடெக்னிக் படிக்க போகிறோம், எங்களை மன்னித்து விடுங்கள்” என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மாணவிகளின் பெற்றோர் உடனடியாக மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான மூன்று மாணவிகளையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.