கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி விஷ சாராயம் குடித்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 66 பேர் உயிரிழந்த நிலையில் 161 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினர்.
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாபுரம் திருவரங்கம் நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அதன் அடிப்படையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.