கோவை செல்வபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சொக்கம்புதுரை சேர்ந்த இளைஞரை 6 வருடமாக காதலித்து வந்தார். இந்த காதலினால் அந்த இளம் பெண் கர்பமடைந்தார். தான் கர்பமடைந்ததை வாலிபரிடம் தெரிவித்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனை அறிந்த வாலிபரின் பெற்றோர் இளம்பெண்ணிடம் கர்ப்பத்தை கலைத்தால் மகனுடன் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர்.
அதனை நம்பிய இளம்பெண்ணும் கருவை கலைத்துள்ளார். ஆனால் வாலிபரின் பெற்றோர் காதலியுடன் திருமணம் செய்து வைக்காமல் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து அந்த காதலனும் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காதலிக்கும் போது எடுத்த ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவேன் என்றும் உன் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.