100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் நடத்திய சோதனையின் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நில மோசடி வழக்கில் விஜயபாஸ்கர்க்கு உடந்தையாக இருந்த சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.