கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் கோதையாறு, குழித்துறை உள்ளிட்ட ஆறுகளில் திறந்துவிடப்பட்டதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து திற்பரப்பு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்ததால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே இன்று 2-வது நாளாக அருவியில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.