தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். இதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்தது. இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் உடல் எடையை அதிகரித்துக் குண்டாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் நிறைய வந்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இருக்கின்றனர்.