மேஷம் ராசி அன்பர்களே…! சமூகத்தில் உங்களைப் பற்றி நல்ல மதிப்பீடு உருவாகும்.
நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். எளிமையாக எல்லாம் நடக்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் தேடி வரும். சிலர் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். வீட்டுக்கு தேவையான உபயோக பொருட்களை வாங்க கூடிய சூழல் உண்டாகும். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். நேரடியாக நடந்து கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குழப்பம் இல்லாமல் இருக்க பாருங்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வரன் வரும். எதிலும் குழப்பம் இல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டம் உண்டாகும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்.
தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து பெண்கள் முன்னெச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். பெண்களுக்கு என்ன சமையல் செய்வது என்று குழப்பமே பெரிய குழப்பமாக இருக்கும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் பொறுமை காப்பது ரொம்ப நல்லது. காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு அவசியம். மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்தி கொள்வீர்கள். கல்வியல் ஜெயிப்பீர்கள். விளையாடும் பொழுது கவனமாக விளையாட வேண்டும்.
முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.