சின்னத்திரையில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் 8வது சீசனில் பங்குபெறும் போட்டியாளர்கள் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை கிரண், ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா, அமலா சாஜி, சோனியா அகர்வால், பப்லு பிரித்திவிராஜ், பாடகி சுவேதா மேனன், பாடகி கல்பனா, பூனம் பஜ்வா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், பாடகி சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக், ரியாஸ்கான் மற்றும் பல பிரபலங்களின் பெயர்கள் இணையத்தில் வெளியாகி வலம் வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.