கோவையில் மேற்கு தொடர்ச்சி பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஜூன் மாதம் 26-ம் தேதி கோவை குற்றாலம் பகுதியில் நீர்வரத்து அதிகமானதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்து அருவிக்கு செல்வதற்கான பாதை மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நீரின் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாடிவயல், நொய்யல் ஆற்றிலும் நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் வனத்துறையினர் கோவை குற்றாலம் அருவியில் விதித்த தடை நீட்டித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர்.