Home செய்திகள்உலக செய்திகள் தனியார் நிறுவனத்தில் கர்ப்பமாக இருந்தால் பணி கிடையாதா…. சீன அரசு எச்சரிக்கை….!!

தனியார் நிறுவனத்தில் கர்ப்பமாக இருந்தால் பணி கிடையாதா…. சீன அரசு எச்சரிக்கை….!!

by Sathya Deva
0 comment

சீனாவில் உள்ள ஜிங்சு மாகாணத்தின் தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்கின்றனர். அப்போது அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அறிய கர்ப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடுகிறார்கள் .

அதற்கும் மேலாக குழந்தை இருந்தால் கண்டிப்பாக குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டு வர வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. இவர்கள் பெண்களின் பிரசவ கால விடுமுறையே தவிர்க்க இப்படி செய்கின்றனர் என கூறப்படுகிறது . இந்த சம்பவம் குறித்து இணையதளம் மூலம் சீன அரசுக்கு கொண்டு சென்றனர். அப்போது 16 நிறுவனங்களில் சட்ட விரோதமாக 168 பெண்களுக்கு உடற்பரிசோதனை என்ற பெயரில் கர்ப்ப பரிசோதனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் அபராதம் விதிக்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.