தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் மயக்கம் என்ன. இந்த படத்தில் கதாநாயகியாக ரிச்சா லங்கேலா என்பவர் நடித்திருந்தார். தெலுங்கில் ரிலீசான லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தமிழில் அறிமுகமான படம் மயக்கம் என்ன.
இதனை தொடர்ந்து சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் பிறகு எந்த பட வாய்ப்பும் வரவில்லை. இவர் ஜோ லங்கெல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், இவர் தனது கணவன் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.