தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பெரும்பாலானோர் வார இறுதியில் பயணம் செய்வது வழக்கம். அதற்கு ஏற்றார் போல் தமிழக போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் நாளை ஆடி மாத பவுர்ணமி என்பதால் அதிக பயணிகள் மற்ற மாவட்டங்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகள் எளிதில் சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், திருச்சி, கும்பகோணம், மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல இன்று 260 பேருந்துகளும், நாளை 585 பேருந்துகளும் இயங்கிப்படவுள்ளது.
இதனையடுத்துகோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு, நாகை, வேளாங்கண்ணி ஆகிய மாவட்டங்களுக்கு 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலை சென்று வர கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 30 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து நெல்லை, மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.