தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதி நிறைவடைகிறது. வழக்கமாக மாநில ஆளுநராக 5 ஆண்டு காலம் அந்த பதவியில் இருக்கலாம். அதற்கு பின் புதிய ஆளுநரை தேர்ந்தெடுப்பது அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் அவரே மீண்டும் ஆளுநராக நியமிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் பதவி காலம் நிறைவடையும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளார்.
எனவே அவரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலு கேரளா தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுநர் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய உள்ளதால் இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.