பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்வது மற்றும் 6 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா ,கொதிக்கலன்கள மசோதா , பாரதீய வாயுயான் விதேயக் மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதில் பாரதீய வாயுயான் விதேயக் மசோதா தற்போது உள்ள விமான சட்டம் 1934 திருத்தம் செய்யும் மசோதா ஆகும். இது சிறு விமானத்துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்கும் என கூறப்படுகிறது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதிகளையும் மேம்படுத்தும் என தெரிவிக்கிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க இருப்பதாக மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது என கூறியுள்ளார்.