கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் தொல்லியல் துறையினர் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் ஏற்கனவே ராஜராஜன் காலத்து செம்புக்காசு, வட்டச்சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த அகழாய்வில் பழங்கால ரௌலட்டட் வகை பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இந்த தகவலை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வகை பானைகள் மட்கலன்கள் சங்க காலத்தின் தொடக்க வரலாற்று காலத்தை சார்ந்தவை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை ஒட்டி வாழ்ந்த மக்கள் இந்த பானைகளை தயாரித்தனர் என அண்மை ஆய்வுகள் கூறுகின்றன.