Home செய்திகள் 100 கிராமங்களில் மின் துண்டிப்பு… மரங்கள் முறிந்ததால் அவதி… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!!

100 கிராமங்களில் மின் துண்டிப்பு… மரங்கள் முறிந்ததால் அவதி… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!!

by Revathy Anish
0 comment

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனையடுத்து மழை நீரால் மூழ்கிய வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

மேலும் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வனத்துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கூடலூர்-மசினகுடி செல்லும் சாலையில் உள்ள தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் மசினகுடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் மழை வெளுத்து வாங்குவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.