Home செய்திகள்உலக செய்திகள் மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறு…. உலக அளவில் ஏற்பட்ட பாதிப்பு…. இந்தியாவில் 150 விமானங்கள் ரத்து….!!

மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறு…. உலக அளவில் ஏற்பட்ட பாதிப்பு…. இந்தியாவில் 150 விமானங்கள் ரத்து….!!

by Revathy Anish
0 comment

மைக்ரோசாப்ட் மென்பொருளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக உலக அளவில் விமான சேவைகள், பங்குச்சந்தைகள் ஆகியவற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரௌட்ஸ் ஸ்ட்ரைக் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் பல்வேறு இடங்களில் ப்ளூ ஸ்கிரீன் எரர் ஏற்பட்டு மைக்ரோசாப்ட் முடங்கியுள்ளது. இதனால் உலக அளவில் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் பிரச்சினையால் இதுவரை உலகம் முழுவதிலும் 1390 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விமான வருகை புறப்பாடு பதிவு உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளன. இந்தியாவில் மட்டும் 150 க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி வணிக நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் என பல்வேறு துறையில் பணிகள் முடங்கியுள்ளன. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான வழியில் கிரௌட்ஸ் ஸ்ட்ரைக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.