ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவில் ஜாகிர் உசேன்(46)- -ஹசீனா(39) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆயிஷா பாத்திமா, ஜனா பாத்திமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள நகராட்சி மகளிர் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் ஜாகிர் உசேன் புதிய தொழில் தொடங்குவதற்காக மகளிர் சுய உதவி குழு மற்றும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைஎடுத்து கடன் பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டதால் வந்ததால் ஹசீனா மிகவும் மன உளைச்சலுடன் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் இறந்து விட்டால் 2 மகள்களையும் யார் பார்த்துக் கொள்வார் என்று எண்ணி வருத்தத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று ஹசீனா 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து அவர்களை தூங்க வைத்துவிட்டு அவரும் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஹசீனா, ஆயிஷா பாத்திமா, ஜனா பாத்திமா ஆகியரின் உடலை மீட்டு உடற்கூறாவிற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.