Home செய்திகள் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை… த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியண் பேட்டி…!!

அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை… த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியண் பேட்டி…!!

by Revathy Anish
0 comment

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சி மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்னும் பொது பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. என்னை போன்ற அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் எனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு தற்போது வழங்கப்படுவதில்லை, ஒரு காவல்துறை அதிகாரி மட்டுமே பாதுகாப்பு வழங்கி வருகிறார்.

எனவே அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். இதனையடுத்து தமிழகத்தில் அதிகளவில் புழங்கி வரும் கஞ்சா போதை பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். கஞ்சா போதையினால் பலரும் கூலிப்படைகளாக மாறி வருகின்றனர். அதனை கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.