Home செய்திகள் ஜம்முவில் தொடரும் தாக்குதல்… 3000 வீரர்களை அனுப்பிய அரசு…

ஜம்முவில் தொடரும் தாக்குதல்… 3000 வீரர்களை அனுப்பிய அரசு…

by Sathya Deva
0 comment

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் கடுவா பகுதியில் தாக்குதல் ஏற்பட்டதில் 5 வீரர்களும் மற்றும் தோட மாவட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. இங்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு வீரர் 34 பேர் உயிரிழந்தனர். அதே நேரம் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஜம்மு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை கண்டுபிடித்து ஒழிக்க போலீசாரும் ராணுவமும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

இதனால் தெற்கு பகுதியில் பயங்கரமான தாக்குதல் சில நாட்களாக அதிகரித்து வருவதால் அப்பகுதிக்கு 3000 ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் 400 முதல் 500 வரை சிறப்பு படை வீரர்களும் ஒரு வாரத்திற்கு முன்பு ஜம்மு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூடுதல் வீரர்கள் ஜம்மு பகுதியில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப் படுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.