Home செய்திகள் திருப்பதி தேவஸ்தானதில்ஆடை கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை….!!!

திருப்பதி தேவஸ்தானதில்ஆடை கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை….!!!

by Sathya Deva
0 comment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானதில் பணிபுரியும் ஊழியர்கள் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும் எனவும் தினமும் ஆண் ஊழியர்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது .

இங்கு பெண் ஊழியர்கள் இந்துக்களின் புடவை, ரவிக்கை, சுடிதார் மேல் துப்பட்டாவுடன் அணிந்து வெற்றியில் திலகம், குங்குமம், ஸ்டிக்கர்களை வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாயா என்று கூறி பின்னர் பேச தொடங்க வேண்டும்.இதை மீறினால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.