புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெம்மகோட்டை பகுதியில் வசித்து வரும் அருள்வினித்(28) என்பவர் வேங்கடகுளம் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் பூமத்தான்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்தனர்.
சம்பவத்தன்று புவனேஸ்வரி அருள்வினித்தை தொடர்பு கொண்டு நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்வினித் உடனடியாக புவனேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் யாரும் இல்லாததால் அருள்வினித் உள்ளே சென்று பார்த்த போது புவனேஸ்வரி தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்வினித் புவனேஸ்வரி உடலை கீழே இறக்கி வைத்து விட்டு அவர் உடனடியாக வேங்கடகுளம் பகுதிக்கு சென்றார். அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு அங்கயே மயங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக அருள்வினித்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வாலாந்தரகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறாவிற்காக செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.