சீனாவில் உள்ள ஷாங்லூ நகரில் ஜாஷிய் கவுண்டில் அமைந்துள்ள பாலம் நேற்று மாலை பெய்த கனமழையால் இடிந்துள்ளது. இதனால் ஏராளமான வாகனங்கள் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டன. இதில் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆற்றில் விழுந்த வாகனங்களை மீட்பு குழுவினர் மீட்டு உள்ளனர். மாயமானவர்களை தேடு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மீட்பு பணிகளுக்கு கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டு அனுப்பப்பட்டதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்தது. இதற்காக தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழு வாகனங்கள், படகுகள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த விபத்து குறித்து சீனா அதிபர் கூறுகையில் “மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முழுதாக மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.