நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் அதிக அளவு கன மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் ஆறுகள், நீரோடியர்கள் அருகில் யாரும் செல்லவோ குளிக்கவோ கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல பகுதிகளில் நிலச்சரிவு, மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுவதால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தால் பொதுமக்கள் அதன் அருகில் செல்லாமல் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு அறை எண் 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.