அமெரிக்க அதிபர் தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் இறக்கிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அவர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிபருக்கான கடமைகளை தொடர்ந்து செய்வதாகவும் வெள்ளை மாளிகை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவர் கொரோனா தொற்று காரணமாக இவர் கொரோனாவுக்கான ஆறாவது டோஸ் கோவிட் எதிர்ப்பு மாதிரி உட்கொண்டு உள்ளார். இருப்பினும் அவருக்கு உடல் தளர்வு இருமல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் சாதாரண வரம்புகளுக்குள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர் ஒரு பேட்டியில் “தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து இருந்தார் “என்பது குறிப்பிடத்தக்கது.