விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி கிராமத்தில் துணை சூப்பிரண்டு போலீஸ் சுந்தரபாண்டியன் தலைமையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையை ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் சுமார் 232 கிலோ கஞ்சா இருந்துள்ளது.
இதனையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த உதயகுமார்(44), ஆசிப்(25) என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்த போலீசார் சரக்கு வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் இவர்கள் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதியில் இருக்கு கஞ்சா வியாபாரிகளுக்கு சப்ளே செய்வது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து கஞ்சாவை வாங்கி அதை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.