வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளின் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பிரச்சனையால் நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையிலும் போராட்டக்காரர்கள் தீ வைத்து உள்ளதால் அங்கு உள்ள கைதிகள் தப்பி ஓடினர். சுமார் 800 கைதிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சினையால் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது ஆனாலும் இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதுவரை 130க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வங்காளதேசத்திலிருந்து 1000 மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர் என்று கூறப்படுகிறது. மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என கூறப்படுகிறது.