Home செய்திகள் முதலமைச்சர் உள்பட 14 பேருக்கு நோட்டீஸ்… வழக்கு 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

முதலமைச்சர் உள்பட 14 பேருக்கு நோட்டீஸ்… வழக்கு 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

by Revathy Anish
0 comment

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போது கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்எல்ஏக்கள் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக இந்த உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தனிநீதிபதி உரிமைக்குழு நோட்டிசை ரத்து செய்தார்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், சி. குமரப்பன் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து வழக்கை தேதி அறிவிக்காமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

அதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் எதிர்மனுதாரரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 14 பேருக்கு நேரிலோ, எலக்ட்ரானிக் முறையில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்த நோட்டீசை பெற்றுக் கொண்டு அவர்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற வியாழன் கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.