நாட்டில் உள்ள அனைத்து தொழில்துறையிலும் ஒரு லட்சத்திற்குள் சம்பளம் கொண்ட வேலையில் சேரும் முதல் முறை ஊழியர்களுக்கு அவர்களின் மாத சம்பளம் வருங்கால வைப்பு நிதியில் 3 தவணையாக அரசு செலுத்தும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 210 லட்சம் இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சனையால் பாஜகவின் வாக்குகளை சிதறெடுத்த நிலையில் இதனை அதிகரிக்கும் நோக்கில் மேலும் இரண்டு அறிவிப்புகள் இதன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி துறை சார்ந்த தொழிலில் உள்ள பணியிடங்களை அதிகரிக்கும் திட்டம் உள்ளது. மேலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் வரையறுக்கப்பட்ட ஊக்கத் தொகையானது அவர்கள் வேலைக்கு சேர்ந்த முதல் நான்கு வருடங்களுக்கு தொடர்ந்து செலுத்தப்படும் . இதனால் புதிதாக வேலையில் சேரும் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று முறையில் தெரிவித்தார். அது மட்டும் இன்றி நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் கூடுதலாக ஒரு ஊழியருக்கு வைப்பு நிதி செலுத்தும் போது அந்நிறுவன்களுக்கு 3000 வரையிலான தொகையை அரசு திருப்பி செலுத்தும் என கூறியுள்ளார். இந்த திட்டம் நிறுவனங்கள் அதிக பணியிடங்களை உருவாக்க வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.