Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்மயிலாடுதுறை “பசுமை தமிழ்நாடு இயக்கம்”… முதலைமேடுதிட்டு காப்புக் காட்டில் 1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி….!!!!!

“பசுமை தமிழ்நாடு இயக்கம்”… முதலைமேடுதிட்டு காப்புக் காட்டில் 1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி….!!!!!

by dailytamilvision.com
0 comment

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகில் முதலைமேடுதிட்டு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 52 எக்டேர் பரப்பளவில் காப்புக்காடு இருக்கிறது. இந்த காட்டில் வனத்துறை சார்பாக பல்வேறு வகையான மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த காப்பு காட்டில் நாகப்பட்டினம் வன உயிரின கோட்டம் சீர்காழி வனச்சரகம் சார்பாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1700 மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்று மரக்கன்று நட்டு வைத்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப்டேனியல் மற்றும் பணியாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ், கிராம மக்கள் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.