சென்னை பாரிமுனை கடற்கரை பேருந்து நிறுத்தத்தால் வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை சேர்ந்த சாமுவேல், கும்மிடிபூண்டியை சேர்ந்த லோகேஷ், மீஞ்சூர் ஸ்ரீகாந்த் என்பதும் இவர்கள் மாநில கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலால் பழிக்குப்பழி வாங்குவதற்காக கத்தியுடன் காத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த போலீசார் மாணவர்கள் 3 போரையும் ஆயுத தடை சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 1/2 அடி நீல பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.