திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரங்ககுப்பம் பகுதி மீனவர்கள் சிலர் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். இதனையடுத்து அவர்கள் மீன்பிடி வலைகளை கடற்கரையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில வைத்துவிட்டு சென்றனர். சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென அந்த மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருபாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தீயில் எரிந்து சேதமான வலைகள் 1 கோடி ரூபாய் என மீனவர்கள் தெரிவித்தனர். சமீப காலமாக தொடர்ந்து இதேபோல் கடற்கரையில் வைக்கப்பட்ட மீன்பிடி வலைகளை மர்மநபர்கள் சிலர் இரவு நேரங்களில் தீ வைத்து விட்டு செல்வதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.