Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! சுயதொழில் நாட்டம் அதிகரிக்கும்…! மாணவர்கள் தேர்வில் வெற்றி காண்பீர்கள்…!!

மேஷம் ராசிக்கு…! சுயதொழில் நாட்டம் அதிகரிக்கும்…! மாணவர்கள் தேர்வில் வெற்றி காண்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்.

உத்தியோகத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகும். சின்ன சின்ன தொந்தரவுகள் ஏற்படும். சேமித்து வைத்து பணம் செலவுக்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை கொடுக்கும். சீரான ஓய்வு உடல் நலனை பாதுகாக்க கூடும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முடிக்க முடியாத காரியத்தை கூட முடித்துக் காட்டுவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பீர்கள்.

புகழ்ச்சிக்கு மயங்கமாட்டீர்கள். பெண்களுக்கு சுய தொழில் நாட்டம் அதிகரிக்கும். காதல் பிரச்சினையை கொடுக்காது. காதலை நினைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி இருக்கும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.