பழனி கோவில் அருகே உள்ள கிரிவலப் பாதையில் செயல்பட்டு வரும் தனியார் சிற்பக்கூடத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண்ணசாமி சிலை செய்யப்பட்டு வருகிறது. 24 அடி உயரம் கொண்ட கருப்பண்ணசாமி சிலை சுமார் 40 டன் எடையை கொண்டுள்ளது. இதற்காக கரூரில் இருந்து பிரத்தியேகமாக ராட்சத கருங்கல் கொண்டுவரப்பட்டு கடந்த 8 மாதங்களாக சிலை செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த சிலை கருப்பண்ணசாமி ராட்சத அரிவாளுடன் நிற்கும் கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலை மதுரையில் உள்ள கோவிலில் வைப்பதற்காக செய்யப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று கோவில் நிர்வாகத்திடம் சிலையை ஒப்படைக்க உள்ளதாக சிற்ப கலைஞர்கள் தெரிவித்தனர்.